600 அடி ஆழ்துளையில் விழுந்தாலும் அரை மணி நேரத்தில் குழந்தையை மீட்கலாம்! அசர வைக்கும் கருவியை கண்டுபிடித்த மதுரை மாணவர்!

ஆழ்துளை கிணற்றில் விழுபவர்களை காப்பாற்றுவதற்காக இளைஞர் ஒருவர் கருவி கண்டுபிடித்துள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பேசும் பொருளாக இருந்தது 2 வயது குழந்தை சுர்ஜித். அவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கி கொண்ட சம்பவம் தமிழ்நாட்டு மக்களை உலுக்கியது. அரசாங்கம் எவ்வளவோ முயன்றும், 80 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுர்ஜித் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

இந்த செய்தியானது தமிழகத்தை உலுக்கியுள்ளது. ஆழ்துளை கிணற்றில் விழுபவர்களை காப்பாற்றுவதற்காக எவ்வளவு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பினும் சுர்ஜித்தை காப்பாற்ற இயலாதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள மேலூரருகே ரெங்கசாமிபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வசித்துவரும் முருகன் என்ற மாணவன் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை காப்பதற்காக ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார். சுஜித் இறந்தபிறகு இவருக்கு இதற்காக ஒரு கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற உத்வேகம் அவருள் தோன்றியுள்ளது. 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை அரை மணி நேரத்திற்குள் வெளியே எடுக்கும் வகையில் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார். செய்முறையில் சோதித்து பார்ப்பதற்காக குழந்தைகள் எடை உள்ள ஒரு பொம்மையை குழிக்குள் போட்டனர்.

மிகவும் எளிதாக அந்த பொம்மையை வெளியே எடுத்துள்ளார். தான் கண்டுபிடித்த கருவியை எளிதில் குழிக்குள் அனுப்பி பொம்மையை எடுத்துள்ளார். 600 அடியாழத்தில் விழுந்தாலும் மிகவும் எளிதாக வெளியே எடுத்துவிடலாம் என்று நம்பிக்கை அளித்துள்ளார். 

இந்த கண்டுபிடிப்பை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.