விமானத்தின் பர்ஸ்ட் கிளாஸ் டாய்லெட்டில் ரகசிய கேமரா! தெரியாமல் உள்ளே சென்ற பெண் பயணி! காத்திருந்த அதிர்ச்சி!

விமானத்தின் கழிவறையில் ரகசிய கேமராவை பொருத்திய மலேசிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சாண் டீகோ நகரிலிருந்து ஹூஸ்டன் நகருக்கு புறப்பட்டது. மொத்தம் 646 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. இந்த விமானத்தின் பிசினஸ் கிளாஸில் பயணம் செய்த பெண்ணொருவர் கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறை எனும் மின்னுவது போன்ற கண்ணாடி பகுதி இருந்துள்ளது. இதனை கண்ட அந்த பெண் விமான ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தார்.

விமான ஊழியர்கள், விமான அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். பரிசோதித்த விமான அதிகாரிகள் கேமரா இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்து புகாரை நிரூபித்துள்ளனர்.

பின்னர், அந்த கேமரா பதிவுகளை தீவிரமாக கண்காணித்த போது கேமராவை ஒருவர் பொருத்துவது போன்று அமைந்துள்ளது. அந்த நபரும் அதே விமானத்திலேயே பயணம் செய்துள்ளார். லீ என்ற மலேசிய இளைஞர் தற்போது ஹூஸ்டன் நகரில் வசித்து வருகிறார்.

அவர்தான் கழிவறையில் கேமரா பொருத்தியதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். குற்றமானது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவமானது விமான நிலையத்தில் சற்று நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.