ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ.20 ஆயிரம்..! வெறும் இட்லி சுட்டே லட்சாதிபதி ஆன சென்னை ரமேஷ்!

இளைஞர் ஒருவர் இட்லி தயாரித்தே மாதம் 1 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் செய்தியானது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.


சென்னையில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு எம்.ஏ. பட்டதாரியாவார். பல்வேறு வேலைகளை செய்து வந்த ரமேஷ் போதிய வருமானம் இல்லாததால், 1 லட்ச ரூபாய் கடனுடன், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் சென்னைக்கு வந்துள்ளார். 

அப்போது இவருடைய சித்தி ஒருவர் ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த ஹோட்டலில் வீட்டு இட்லி தயாரிப்பதற்காக ஆள் தேவைப்பட்டது. உடனடியாக ரமேஷ் தன்னுடைய மனைவியுடன் இணைந்து இட்லி தயாரிக்க தொடங்கியுள்ளார். இவர்களது கைப்பக்குவத்தில் மிகவும் மிருதுவான மற்றும் ருசியான இட்லிகள் வந்துள்ளன. இதனால் இவர்களுடைய ஆர்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது.

இதில் வரும் வருவாய் நன்றாக இருந்ததால் குடும்பம் முழுவதும் இந்த இட்லி தயாரிப்பில் ஒவ்வொரு பணியில் ஈடுபட்டனர். தற்போது அவர்கள் அனைத்து வேலைகளுக்கும் மெஷின்களை வாங்கியுள்ளனர். ஒருநாள் வருவாயாக கிட்டத்தட்ட 20,000 ரூபாயை ஈட்டுகின்றனர்.  தினந்தோறும் குறைந்தது 35,000 இட்லிகளை தயாரித்து வருகின்றனர். 

தொடக்கத்தில் இட்லி சுடுவதற்காக தன்மை கேலியாக பார்த்த நபர்களின் மத்தியில் வளர்ந்திருப்பது பெருமையாக இருப்பதாக ரமேஷ் கூறுகிறார்.

"செய்யும் தொழிலே தெய்வம்" என்ற முழு மனதுடன் ஈடுபட்டால் எந்த தொழிலிலும் வெற்றி பெறலாம், என்பதற்கு எடுத்துக்காட்டாக ரமேஷின் வாழ்க்கை அமைந்துள்ளது.