மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் அடித்து துன்புறுத்தி கத்தியால் குத்தப்பட்ட சம்பவமானது நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அய்யா..! உயிர் பிச்சை கொடுங்க! ரவுடி கஞ்சா மணியிடம் மண்டியிட்டு கதறிய மத்திய படை போலீஸ்! நெய்வேலி திகுதிகு!
நெய்வேலியிலுள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் கஞ்சா அதிகளவில் வளர்க்கப் பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கஞ்சா செடிகளை குஞ்சாமணி என்று ரவுடி தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நெய்வேலி சுரங்கத்தில் காப்பர் திருடுவதற்கு ரவுடி குஞ்சாமணி தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்றுள்ளான். என்எல்சி இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தில் காப்பாற்றுவதற்காக சென்றபோது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான செல்வேந்திரன் என்பவரை ரவுடி கும்பல் கத்தியால் தாக்கிவிட்டு காப்பர் திருடி சென்றுள்ளது.
மற்றொரு பாதுகாப்புப்படை வீரரான தாஸ் என்பவர் ரவுடி மணியை பின்தொடர்ந்து சென்று அவனுடைய இருசக்கர வாகனத்திலிருந்து சாவியை எடுத்து ஆவேசமாக சண்டை போட்டுள்ளார். அப்போது அவர் சுற்றியிருந்த கஞ்சா போதை கும்பலிடம் தனியாக சிக்கிக்கொண்டார். அவளை முட்டி போட வைத்து சில நிமிடங்கள் பேசிய பிறகு ரவுடி கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்கிறது.
இந்த சம்பவத்தை வீடியோ எடுக்க முயன்ற மற்றொரு அதிகாரி, காவல்துறை அதிகாரி ஒருவரின் பெயரை கூறிக்கொண்டு தப்பி செல்கின்றார். பட்டப்பகலிலேயே மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை கொலை செய்யும் அளவிற்கு ரவுடி கஞ்சா மணியின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது என்று மத்திய பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.
உள்ளூர் காவல்துறையினர் ரவுடி கஞ்சா மணிக்கு ஆதரவாக செயல்பட்டு, அவனை சுதந்திரமாக அலைய விடுகின்றனர் என்றும் ஆகிய பாதுகாப்பு படையினர் வேதனைப்படுகின்றனர். இந்த சம்பவமானது நெய்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.