வளைவில் படு வேகம்! அரசுப் பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட மாணவி! துடிதுடித்து பலியான பரிதாபம்!

அரசு பேருந்தில் இருந்து கீழே விழுந்து மாணவி பலியான சம்பவமானது ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூருக்கு அருகே தேன்கனிக்கோட்டை என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட தடித்தல் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் அக்ஷயா. அக்ஷயாவின் வயது 12. இவர் அதே பகுதியை சேர்ந்த 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

நேற்று பள்ளி முடிந்த பின்னர் அவர் அரசு பேருந்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். பேருந்து சென்று கொண்டிருந்தபோது வளைவில் அதிவேகமாக திரும்பியுள்ளது. இதனால் பேருந்தில் சென்றுகொண்டிருந்த அக்ஷயா மற்றும் வீரேஷ் ஆகியோர் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் படுகாயமடைந்த வீரேஷ், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவமானது ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.