மலைப்பாதை என்று தெரிந்தும் அதிவேகம்..! ஒரே நொடி..! தலை குப்புற கவிழ்ந்த பஸ்! உள்ளே இருந்த 25 பேர்?

பாகிஸ்தானில் மலைப்பகுதி என்று தெரிந்தும் ஓட்டுநர் அதிவேகமாக சென்றதால் 25 பேர் பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து மிகப்பெரிய விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


பாகிஸ்தானில் மலைப்பகுதி என்று தெரிந்தும் ஓட்டுநர் அதிவேகமாக சென்றதால் 25 பேர் பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து மிகப்பெரிய விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானிலுள்ள ராவல்பிண்டி என்ற ஊரில் இருந்து 25 பேரை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று கிளம்பியது. இந்தப் பேருந்து ஸ்கார்ட் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது . அப்போது கில்கிட் என்ற இடத்தை பேருந்து அடைந்தபொழுது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழுக்கத் தொடங்கியது.

மலைப் பாதையை விட்டு விலகிய அந்த பேருந்து திடீரென்று அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்து மிகப்பெரிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுமார் 19 பேர் பரிதாபமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

19 பேர் இறந்த நிலையிலும் சுமார் ஒன்பது பேர் அது உடல் தான் தற்போது மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்களை அந்நாட்டு அரசாங்கம் ஹெலிகாப்டர் மூலம் தேடி வருகிறது. படுகாயமடைந்த மற்றவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனையடுத்து அந்நாட்டு ராணுவ படையினர் தொடர்ச்சியாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.