நள்ளிரவு! கொட்டிய மழை! பஸ் ஸ்டாண்டில் தனிமையில் இளம்பெண்! டிரைவர், கன்டக்டர் செய்த நெகிழ்ச்சி செயல்! குவியும் லைக்ஸ்!

பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை ஓட்டுநரும், நடத்துநரும் பாதுகாத்து நின்ற சம்பவமானது கர்நாடகாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் கண்ணூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு எல்சினா என்பவர் பிறந்தார். பெங்களூருவிலுள்ள கல்லூரியில் படித்து வருகிறார். தன்னுடைய கல்லூரியில் ஆராய்ச்சி பணிக்காக மதுரையிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அரசு பேருந்தில் வந்தார். பேருந்தானது இரவு 11 மணியளவில் போடிமட்டம் பேருந்து நிலையம் வந்தது.

அப்போது அந்த பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு மயான பூமி போல் காட்சியளித்தது. மழையும் பெய்து கொண்டிருந்த சூழலில் பேருந்து ஒட்டுநரான டென்னிஸ் சேவியர் மற்றும் நடத்துநர் ஷாஜுதின் ஆகியோர் அந்த பெண்ணின் உறவினர் வரும்வரை காத்திருந்து அதன் பின்னர் அங்கிருந்து பேருந்தை எடுத்தனர். 

இதனைப் பயணம் செய்த ஒருவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த அந்த தொகுதி எம்.எல்.ஏ.யான ஜார்ஜ் பாராட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். "என் தொகுதிக்குட்பட்ட கல்லூரி மாணவிக்கு பாதுகாப்பாக இருந்தார் பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார். 

மேலும் தல பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் தங்கள் பங்கிற்கு பாராட்டுகளை குவித்த வண்ணம் உள்ளனர். இந்த செய்தி அழகு அனைவரையும் நெகிழ செய்துள்ளது.