மடிப்பு கலையாத வேட்டி! தோளில் துண்டு! ஒரு பெரிய மனுசன் பண்ற வேலையாடா இது? வைரலாகும் சிசிடிவி காட்சி!

நகைக்கடை உரிமையாளரின் வீடுபுகுந்து கடையின் சாவியை திருடி, நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவமானது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் அருகே விரிகோடு மடத்துவிளை என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பொன் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மார்த்தாண்டம் பகுதியில் சொந்தமாக "ஜெயஸ்ரீ ஜுவல்லர்ஸ்" என்ற கடை அமைந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னால் இவர் வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் வீட்டின் மொட்டை மாடி வழியாக நுழைந்து 60 கிலோ தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனர். இந்த பொருட்கள் பூஜை அறையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் அங்கிருந்து திருடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அதே பூஜை அறையில் நகைக்கடைக்கான சாவியும் இருந்துள்ளது. அந்த சாவியை எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் இரவோடு இரவாக நகைக்கடைக்கு சென்றுள்ளனர். அங்கு சுமார் 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடியுள்ளனர். மறுநாள் காலையில் வீடும் நகைகளையும் திருடப்பட்டதை உணர்ந்த பொன்விஜய் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் அமைக்கப்பெற்ற சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் துப்புகளை கண்டுபிடித்து வருகின்றனர். சிசிடிவி கேமரா பதிவுகளில் முகமூடி போட்டு நபர்கள் நகை கடைக்கு சென்று கொள்ளையடிப்பது தெளிவாக பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஆகிய வசதிகளுடன் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்ற மாதத்தில் மார்த்தாண்டத்தில் அமைந்துள்ள சிலங்கா நகை கடையிலிருந்து 150 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை காவல்துறையினரால் குற்றவாளிகளை கைது செய்ய இயலவில்லை.

வடமாநில கும்பல் ஏதேனும் மார்த்தாண்டத்தில் சிக்கி நகைக்கடைகளில் கொல்லையில் ஈடுபடுகின்றனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல்துறை ஆணையர் ஆன ஸ்ரீநாத் இந்த கொலை சம்பவம் குறித்து பேட்டி அளிக்கையில், "விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொள்ளை அடித்தவர்கள் உரிமையாளருக்கு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு உடையவர் ஆகவே இருக்க வேண்டும். வணிக வர்த்தக மையங்களில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறாமல் இருப்பதற்கு சிசிடிவி கேமராக்களை உபயோகப்படுத்த வேண்டும். அவற்றை செல்போன் என்னுடன் இணைத்துக் கொண்டு அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்." என்று கூறினார்

முன்னதாக நடைபெற்ற நகைகடை கொள்ளைக்கும், இந்த கொள்ளைக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.