தாலியை கையில் எடுத்த மாப்பிள்ளை! திடீரென திருமணத்தை நிறுத்திய மணமகள்! அதிர வைக்கும் காரணம்!

உத்திரபிரதேச மாநிலத்தில் தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாக மணமகள் இவரை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர் கஞ்ச் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு வீட்டில் பெரியவர்கள் பெண் பார்த்துள்ளனர்.

திருமண ஏற்பாடு தடபுடலாக நடைபெற ஆரம்பித்தது திருமணத்திற்கு முந்தைய நாள் உறவினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். மறுநாள் காலை மணமக்கள் இருவரும் திருமணத்திற்காக ஆயத்தமாகி மண மேடையில் நின்று கொண்டிருந்தனர்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மணமகனின் தந்தை அங்கு வைக்கப்பட்டிருந்த பாட்டிற்கு உற்சாகமாக நடனமாடியிருக்கிறார். நடனமாடி அவரை பார்த்த மணமகன் தன்னுடைய தங்கையை அருகில் இருந்த நாற்காலியை எடுத்து அடித்திருக்கிறார். மணமகன் தன்னுடைய தங்கையை தாக்கியதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை பார்த்த மணமகள் உடனடியாக கழுத்திலிருந்த மாலையை எடுத்து தூக்கி வீசி விட்டார் இவரை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது எனவும் கூறி விட்டார். இப்படிப்பட்ட கோபக்காரர் இடம் என்னால் வாழ இயலாது எனவும் அவர் கூறியிருக்கிறார்.

பின்னர் இன்று அவர் தங்கையை அடிக்கும் ஒருவர் நாளை என்னையும் இப்படி தான் நடத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை . ஆகையால் என்னால் அவரை திருமணம் செய்து கொள்ள இயலாது எனவும் மணமகள் கூறிவிட்டார். உடனே அங்கிருந்தவர்கள் அனைவரும் மணமகளை சமாதானம் செய்து இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள முயற்சி செய்துள்ளனர்.

 இருப்பினும் அவர் இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தி விட்டார்.