ஹேமா நீ செய்தது நியாயமா? கடிதம் எழுதிவைத்துவிட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு! அதிர வைக்கும் காரணம்!

தான் காதலித்த பெண் தன்னைப்பற்றி காவல் நிலையத்தில் அளித்த புகாரை தாங்கிக்கொள்ள இயலாத காதலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில் துண்டகட்டளை என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு வசந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு மன்னார்குடி அருகே கூனமடை என்னும் கிராமத்தை சேர்ந்த ஹேமாஸ்ரீ என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இருவீட்டாருக்கும் தகவல் தெரிந்து சம்மதித்தனர். 4 மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களாக ஹேமாஸ்ரீ மற்றும் வசந்தகுமார் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாக தொடங்கின. ஹேமாஸ்ரீ வசந்தகுமாரை சந்தேகித்தார். சந்தேகத்தின் பலனாக வசந்தகுமார் மீது ஹேமாஸ்ரீ மன்னார்குடி மகளிர் காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றுவதாக புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் கடந்த 28-ஆம் தேதியன்று வசந்தகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர். நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற வசந்தகுமார் வெளியே வந்தார். உறவினரின் வீட்டில் தங்கியிருந்த அவர், தான் காதலித்த பெண்ணை தன்னைப்பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தாங்கிக்கொள்ள இயலாமல் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலையை மன்னார்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.