தோசை, இட்லிக்கு சட்னி, சாம்பார் அலுத்துவிட்டதா? இதைச் செய்து பாருங்கள்!

புளிமிளகாய் - நெல்லை சமையலில் நாவூற வைக்கும் ஒரு டிஷ். இதை தோசை, இட்லிக்கு மட்டுமல்லாமல், தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். சுவையாக இருக்கும்.


கல்யாண விருந்துகளில் இந்த புளி மிளகாயை நிறைய பேர் சாப்பிட்டிருக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மிளகாய் - 150 கிராம்

நல்லெண்ணெய் - 50 கிராம்

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

புளி, உப்பு, வெல்லம் - தேவையான அளவு

பெருங்காயப் பொடி - சிறிதளவு

கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

செய்யும் முறை:

மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு தடவை தண்ணீரில் அலசினால், அதன் விதைகள் போய்விடும். அப்புறம் அதனுடன் கொஞ்சம் உப்பு சேர்த்துக்குங்க. கடாயில் பாதி எண்ணெய் விட்டுப் பச்சை மிளகாய், இஞ்சியைப் போட்டு, பச்சை வாடை போகும்வரை வதக்க வேண்டும்.

கரைத்த புளித்தண்ணீரை ஊற்றி வேகவைக்க வேண்டும். நன்றாகக் கொதித்ததும், பெருங்காயப்பொடி, வெல்லத்தைச் சேர்த்து இறக்க வேண்டும். பிறகு இன்னொரு கடாயில் மீதி எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக் கொட்ட வேண்டும்.