போலீசிடம் சிக்கிய கள்ளக் காதல் ஜோடி! உடனே கொடிய விஷ மாத்திரையை சாப்பிட்ட விபரீதம்! கோயம்பேட்டில் பரபரப்பு!

விஷ மாத்திரை உட்கொண்டு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவியின் பெயர் கவிதாமணி. இவருடைய வயது 32. 

கவிதாமணி புளியம்பட்டியை சேர்ந்த ஜெயகுமார் என்பவருடன் பழகி வந்தார். பழக்கமானது நாளடைவில் நெருக்கமாக மாறியது. பின்னர் இருவரும் கள்ளக்காதல் செய்ய தொடங்கினர். கவிதாமணி யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் ஊரை விட்டு வெளியேறியுள்ளார். அவர் ஜெயக்குமார் உடன் கோயம்பேட்டில் வாடகைக்கு வீடெடுத்து வசித்து வந்தார்.

இதனிடையே நம்பியூரின் காவல் நிலையத்தில் தன் மனைவி காணவில்லை என்று குணசேகரன் புகார் அளித்திருந்தார். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கள்ளக்காதல் ஜோடியானது சென்னை நெற்குன்றத்தில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.

காவல்துறையினர் குனசேகரனும் சென்னைக்கு புறப்பட்டனர். நெற்குன்றத்திற்கு சென்று பார்த்தபோது ஜெயகுமார் மட்டுமே அங்கிருந்தார். அவரை அடித்து விசாரித்தபோதுகவிதாமணி சேலத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். 

இன்று அதிகாலை கோயம்பேடுக்கு சென்று கவிதாமணி அழைத்து வருமாறு காவல்துறையினர் ஜெயகுமாரிடம் கூறினர். கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது திடீரென்று இருவரும் விஷ மாத்திரை சாப்பிட்டனர். யாரும் எதிர்பாராத போது நுரை தள்ளி அங்கேயே இருவரும் இறந்து போயினர்.

அவர்களின் உடலை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது கோயம்பேடு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.