ராணுவ வீரர் மனைவிக்கு வீட்டுக்குள் நேர்ந்த பயங்கரம்! முன்னாள் காதலன் அரங்கேற்றிய கொடூரம்! அதிர வைக்கும் காரணம்!

முன்னாள் காதலன், வீட்டில் தனியாக இருந்த காதலியை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சித்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் சித்தூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. சித்தூரில் போலீஸ் காலனி என்னுமிடம் உள்ளது. இங்கு சுரேஷ் என்ற ராணுவ வீரர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சீதாராணி. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன. 

இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வணக்க சப்பினாள் கடந்த நான்காண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சீதா ராணி துர்கா காலனி எனும் இடத்தில் வாடகைக்கு வீடெடுத்து தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பினார். அப்போது ஆட்டோ ஓட்டுநரான ஹமீது என்பவருக்கும் சீதாராணிக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாகவும் மாறியது. இதனையறிந்த சுரேஷ் தன் மனைவியை கடுமையாக கண்டித்தார். இருப்பினும் சீதா ராணி அவருடைய பேச்சைக கேட்காததால் சட்டப்படி விவாகரத்து பெற்றார்.

இதனை அறிந்த ஹமீதின் பெற்றோர் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை வேலைக்காக துபாய்க்கு அனுப்பினர். துபாயில் இருந்து 2 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் ஹமீது சித்தூர் திரும்பினார். தன்னுடைய காதலை அவர் புதுப்பிக்க எண்ணினார். ஆனால் அதற்கு சீதாராணி ஒப்புக்கொள்ளவில்லை. சென்ற வெள்ளிக்கிழமை அன்று ஹமீத் சீதாராணியின் வீட்டிற்கு சென்றுள்ளார். சீதாராணியை தன் ஆசைக்கு இணங்குமாறு கேட்டுள்ளார். சீதாராணி ஒப்பு கொள்ளாததால் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அரிவாளால் ஹமீத் சீதாராணியை பலமாக தாக்கியுள்ளார். 

அலறிய படியே சீதாராணி நடுரோட்டுக்கு வந்து கீழே விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறிது நேரம் சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தன் காதலியை கொலை செய்த விரக்தியில் இருந்த ஹமீத் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். மலையடிவாரத்தின் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது சித்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.