தினகரனுடன் இணைந்த பா.ஜ.க பெண் பிரபலம்!

பாஜகவின் முன்னாள் மாநில மகளிர் அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான திருமதி.எம்.ஆர்.ஜெமிலா அவர்கள் துணைப் பொதுசெயலாளர் திரு.டி.டி.வி. தினகரன் அவர்கள் முன்னிலையில் அவரது அடையாறு இல்லலத்தில் அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.


இந்த சந்திப்பின் போது அமமுக வின் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.வெற்றிவேல் இருந்தார்.

அதே அதிமுக, சமத்துவமக்கள் கட்சி உள்ளிட்ட  மாற்று கட்சியினரை சேர்ந்த பலரும் துணை பொதுச்செயலாளர் முன்னிலையில் தங்களை அமமுகவில் இணைத்துக் கொண்டனர்.

தமிழகத்தில் தாமரை என்றும் மலராது என்றும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது நாட்டுக்கு கேடு என்றும் பாஜகவின் ஊடகப்பிரிவின் மாநில மகளிரணி செயலாளர் ஜெமிலா கருத்து

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜமீலா, தற்போது இருக்கும் தலைவர்களிலே சிறந்த தலைவராக டி.டி.வி அவர்களை பார்க்கின்றேன் காரணம் அனைத்து தரப்பு மக்களின் செல்வாக்கு மிக்க பாசமிக்க தலைவராக அவர் இருக்கிறார்.

கட்சி ஆரம்பித்த குறுகிய நாட்களில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு பெற்ற தலைவராக உள்ளார்.

குறிப்பாக பெண்கள் இளைஞர்கள் மத்தியில் அவர்கள் உச்சரிக்கும் மந்திரமாக உள்ளார். பாஜகவில் இருந்து வெளியில் வந்ததற்கான காரணத்தை கூற விரும்பவில்லை என்றார்.

 அமமுகவின் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவேனன். மேலும் தமிழகத்தில் தாமரை மலராது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றும் பாஜக இந்தியாவில் மீண்டும் ஆட்சிக்கு வருவது இந்த நாட்டிற்கு நல்லது இல்லை. 

மேலும் கட்சி எந்த பணி கொடுத்தாலும் செய்யத் தயாராக உள்ளேன். எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்ய முடியாத விசயங்களை தினகரன் செய்து வருகிறார் என்றார்.