சுடச்சுட மட்டன் பிரியாணி..! வெறும் 5 பைசா தான்..! அருப்புக் கோட்டையை கலக்கிய ஜாகீர் உசேன்..!

5 பைசாவிற்கு பிரியாணி விற்கப்பட்டுள்ள செய்தியானது அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை எனும் இடம் அமைந்துள்ளது. அருப்புக்கோட்டை புது பேருந்து நிலையத்திற்கு அருகே ஜாகிர் உசேன் என்பவர் "சென்னை பிரியாணி" என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார்.  

இன்று இவருடைய கடையில் 5 பைசாவிற்கு மட்டன் பிரியாணி விற்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் கூட்டம் அலைமோதினர். இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, "பள்ளிப் பருவத்தில் எனக்கு பாக்கெட் மணியாக 5 பைசா கொடுக்கப்பட்டது. அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட 5 பைசா நாணயங்களை சேகரிப்பதற்காக இந்த அறிவிப்பை மேற்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பினால் அருப்புக்கோட்டை புது பேருந்து நிலையம் அருகே மக்கள் கூட்டம் அலைமோதியது.