பிகில் திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
கைதி தான் நல்ல லாபம்..! பிகிலால் பிரயோஜனம் இல்லை! உண்மையை போட்டு உடைத்த பிரபல தியேட்டர் ஓனர்!

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியான தியேட்டர்களில் பல ஹவுஸ்புல் காட்சிகளும் அடங்கும். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் மூலம் திரையரங்க உரிமையாளர்கள் தாங்கள் போட்ட பணத்தை எடுக்க முடிந்ததா இல்லையா என்று சர்வே ஒன்று எடுக்கப்பட்டது.
அப்படியாக சில திரையரங்க உரிமையாளர்களிடம் சர்வே செய்தபோது பல தகவல்கள் வெளியாகின. அதில் ஒரு சிலர் பிகில் படம் நல்ல கலெக்ஷனை தான் பெற்று தந்தது . ஆனால் இம்மாதிரியான பெரிய பட்ஜெட் திரைப்படங்களை நாங்கள் வாங்குவதற்கு அதிக பணம் செலவு செய்ய தேவை இருக்கிறது.
ஆகையால் மிகப்பெரிய கலெக்ஷனை படம் பெற்று தந்தாலும் அது நாங்கள் போட்ட பணத்தை மட்டுமே தான் எடுக்க முடிகிறது . அதற்கு மேல் லாபத்தை எங்களால் பார்க்க இயலாத சூழ்நிலை உருவாகிறது . அதே மாதிரியான சூழ்நிலை தற்போது பிகில் திரைப்படத்திற்கும் உருவாகியுள்ளது.
மேலும் பேசிய திரையரங்கு உரிமையாளர்கள், அதேசமயம் சிறிய பட்ஜெட்டில் உருவான கைதி திரைப்படம் எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தை எங்களுக்கு அளித்துள்ளது என்றும் கூறியுள்ளனர். லாபத்தை பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொழிலை செய்கிறோம் ஆனால் போட்ட பணம் தான் கை கிடைக்குமென்றால் அது எங்களுக்கு பெரிய லாபத்தை ஒருநாளும் ஈட்டித் தராது என்று கூறியுள்ளனர்.