மீண்டும் காதலியுடன் இணைந்த பிக்பாஸ் தர்ஷன்..! இரவில் இருவரும் தனிமையில் எங்கு இருக்காங்க தெரியுமா?

பிக்பாஸ் தர்ஷன் தன்னுடைய காதலி சனம் ஷெட்டி உடன் இணைந்து இயக்குனர் சேரன் நடித்திருந்த ராஜாவுக்கு செக் என்ற திரைப்படத்தின் ப்ரிவியூ ஷோவை பார்த்துள்ளார்


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 6-ம் தேதி முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் இலங்கையை சேர்ந்த தர்ஷன் ஒருவராவார். பிக் பாஸ் சீசன் 3 இன் வெற்றியாளர் தர்ஷனா தான் இருக்கக்கூடும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் , அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதத்தில் பிக்பாஸ் வீட்டைவிட்டு தர்ஷன் வெளியேற்றப்பட்டார்.


தர்ஷன் -இன் இந்த வெளியேற்றம் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. பிக்பாஸ் போட்டியாளரான நடிகை ஷெரின் பிக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது தர்ஷன் உடன் நட்பாக பழகி வந்தார் . கடைசியில் அந்த நட்பு காதலாக மாறியது . ஆனால் தர்ஷன் அவர்களுக்கு ஏற்கனவே வேறு ஒரு காதலி இருப்பதால் அதை வெளியே சொல்லாமல் மறைத்து விட்டார் நடிகை ஷெரின்.

அதாவது தர்ஷன் , நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க தற்போது பிக்பாஸ் தர்ஷன் தன்னுடைய காதலியான சனம் செட்டியுடன் இணைந்து இயக்குனர் சேரன் நடித்துள்ள ராஜாவுக்கு செக் என்ற திரைப்படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்துள்ளார். அப்போது அங்கு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்சனுக்கு தன்னால் பிரச்சனை ஏற்படுவதாக கூறி தான் பிரேக்கப் செய்து கொள்வதாக சனம் கூறியிருந்தார். ஆனால் அதை எல்லாம் மறந்து தற்போது மீண்டும் இருவரும் ஒன்றாகியுள்ளனர்.