பிக்பாஸ் சரவணனுக்கு தமிழக அரசில் கவுரவ பதவி! என்ன தெரியுமா?

நடிகர் சரவணன் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஆவார்.


நடிகர் சரவணன் பொண்டாட்டி ராஜ்ஜியம் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். இதற்குப் பின்பு அவர் குணச்சித்திர வேடங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். அதாவது நந்தா, பருத்திவீரன் மற்றும் கடைசியாக கடைக்குட்டி சிங்கம் போன்ற திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடிகர் சரவணன். 

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் நடிகர் சரவணன் ஒருவராவார் . இவர் திடீரென்று இந்த நிகழ்ச்சியை விட்டு ஒரு சில காரணங்களால் வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த சில நாட்களிலேயே இவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது சரவணனுக்கு ஒரு கௌரவப் பதவியை வழங்க இருக்கிறது நம்முடைய தமிழக அரசாங்கம். குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுப்பவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 7 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு, 2007ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட படங்களில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 149 படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.

இதே போல் இந்த ஆண்டும் குறைவான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஒரு குழுவினர் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் உறுப்பினர்களை தற்போது தமிழக அரசாங்கம் தேர்வு செய்துள்ளது . அதில் ஒரு உறுப்பினராக பிக்பாஸ் புகழ் சரவணனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி குலசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் குழு உறுப்பினராக சரவணன் சிங்கப்பூர் இயக்குனர் ஆர் .வி. உதயகுமார் மற்றும் லியாகுவாட் அலி கான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.