பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் நிறைய பேர் என்னை விரும்புனாங்க.. என் கூட இருக்க ஆசைப்பட்டாங்க..! மீரா மிதுன் வெளியிட்ட பகீர் வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும் இதனை பலரும் விரும்பியதாகவும் அவருடன் இருக்க ஆசைப் பட்டதாகவும் வீடியோ ஒன்றில் மீரா கூறியுள்ளார்.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதியுடன் கோலாகலமாக முடிவு பெற்றது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் மற்றும் 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர் . அதில் மாடல் அழகியான மீராமிதுன் , கவின் , சாண்டி, சேரன் , உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதலில் சக போட்டியாளர்கள் இடம் பெரும் சச்சரவில் ஈடுபட்டு வந்தவர் மீரா. ஒருகட்டத்தில் இயக்குனர் சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாகவும் கூறி அவர் மீது பழி சொன்னார் . அப்போது கமலஹாசன் அதற்கான குறும்படம் ஒன்றை வெளியிட்டு செயல் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பின்பு ஒருமுறை தர்ஷன் இடம் தன்னுடைய திருமணம் தொடர்பாக சென்று தன் அம்மாவிடம் வந்து பேசுமாறு அழைத்திருந்தார் மீரா . அதுக்கு தர்ஷன் மறுப்பு தெரிவித்து நான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

தர்ஷன் தன்னுடைய காதலுக்கு பச்சைகொடி காட்டாததால் மலேசியாவிலிருந்து வந்த முகேன் இடம் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். ஆனால் முகேன் மீராவை விட்டு விலகவும் ஆரம்பித்தார். காரணம் அவரும் வேறு ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறியிருந்தார். அதற்குப் பின்பு மீரா குறைவான ஓட்டங்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மீரா வெளியே வந்தவுடன் பல சர்ச்சைக்குரிய வீடியோக்களில் சிக்கினார். அதற்குப் பின்பு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் , நிகழ்ச்சி விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வந்தார் பிக்பாஸ். அப்போது நீரா முற்றிலும் அதில் ஒருவராக நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது முறையாக மீரா செல்வதற்கு முன்பாக அவரைப்பற்றிய ஒரு ஆடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவி வந்தது. 

அந்த ஆடியோ பதிவில் மீரா ,தன்னுடைய நண்பர் ஒருவரிடம் நானும் முகினும் பிக்பாஸ் வீட்டில் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை எடுத்து அதனை வீடியோவாக உருவாக்கி இணையத்தில் வெளியிடுங்கள் என்று கூறியிருந்தார். இந்த ஆடியோ பதிவில் பேசி இருப்பது என் குரல் கிடையாது நான் மிகவும் தைரியமான பெண் எனக்கு இந்த மாதிரியான ஆடியோவை வெளியிட்டு புகழ் அடைய வேண்டும் என்பது கிடையாது என்று கூறினார் மீரா.

இது மட்டும் இல்லாமல் இந்த ஆடியோ வுக்கு பின்னால் இருப்பது சாக்ஷி மற்றும் அபிராமி ஆகியோரின் சதி தான். என்னை பிடிக்காத அவர்கள்தான் இந்த மாதிரியான ஆடியோ பதிவுகளை உருவாக்கி என் பெயரை கெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் என்பது தெரிகிறது என்று வீடியோ பதிவிலும் கூறினார் மீரா மிதுன்.

மேலும் தற்போது ஒரு புதிய வீடியோ பதிவை ஒன்று மீராமிதுன் வெளியிட்டுள்ளார் அந்த பதிவில் பிக்பாஸ் வீட்டில் இருந்த பொழுது பலரும் தன்னை காதலித்ததாகவும் பலரும் தனனிடம் புரோபோஸ் செய்ததாகவும் குறிப்பிடுகிறார். ஆனால் அவர்களது பெயரை சொல்வதற்கு நான் விரும்பவில்லை எனவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

அதனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால் முகநூல் வழங்கப்படும் ஓட்டுக்கள் குறைய வாய்ப்புண்டு என்பதற்காக நான் இத்தனை நாள் கூறாமல் இருந்தேன். யாருடைய வாழ்க்கையும் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது நான் என் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறேன் நல்ல சினிமாக்களை படங்களில் நடித்து முன்னேற வேண்டும் எனவும் ஆசைப்படுகிறேன் என்று அந்த வீடியோ பதிவில் மீரா கூறியிருந்தார்.