ஜோ மைக்கேலை உடனே ஆள வச்சு தூக்குடா! கொலை செய்ய ஆண் நண்பருக்கு கட்டளையிடும் மீரா மிதுன்! வைரல் ஆடியோ!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.


இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் தான் மீராமிதுன். இவர் அந்த வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளிலிருந்து ஒரு வீட்டை விட்டு வெளியே வரும்வரை அங்கிருந்தவர்கள் உடன் ஒத்துப்போகாமல் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்.

இதில் உச்சகட்டமாக சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் அவர் மீது அநியாயமாக குற்றம் சாட்டினார். ஆனால் அவர் கூறிய  குற்றம்  பொய் என்று நடிகர் கமல்ஹாசன் குறும் படம் போட்டு காட்டிவிட்டார் .

இதனையடுத்து அந்த நிகழ்ச்சி விட்டு வெளியேற்றப்பட்டார் மீராமிதுன். பிக்பாஸ் வீட்டைவிட்டு  வெளியே வந்த மீராமிதுன் மீண்டும் பல சர்ச்சைகளில் சிக்கி வந்திருந்தார் . அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் பப்பில் ஒரு ஆணுடன் மிகவும் நெருக்கமாக நடனமாடுவது போல காட்சிகள் நிறைந்த வீடியோவை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் .

இதை பார்த்த பலரும் பலவிதமாக மீராவை கண்டபடி கமெண்ட் செய்து வந்திருந்தனர். இதனையடுத்து தற்போது மீண்டும்  ஒரு புதிய  சர்ச்சையில் சிக்கியுள்ளார் மீராமிதுன். அதாவது மீராமிதுன் , ஜோ மைக்கல் என்பவரை தூக்க வேண்டும் என்று தன் நண்பர் ஒருவரிடம் மிகவும் கோபமாக பேசும் ஒரு ஆடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த ஜோ மைக்கல் மீராவை சமூக வலைத்தளத்தில் தவறான பெண்ணாக சித்தரித்து வருவதாக அவர் மேல் கோபம் கொண்ட மீராமிதுன் தன் நண்பர் ஒருவருக்கு போன் செய்து அவரிடம் ஜோ மைக்கல் ஐ   நீ தூக்கி ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்.

ஜோ மைக்கேலை ஆள வச்சி தூக்கு என்ற  மீராவின் ஆடியோ  ஆதாரத்தை மையமாக வைத்து போலீசில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மிரட்டல் ஆடியோ ஆனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.