பிக்பாஸ் வெற்றியாளரான முகெனின் தந்தை இயற்கை எய்தியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் முகேன் வீட்டில் நேர்ந்த துயரம்..! கதறி அழும் நிலை! என்னாச்சு தெரியுமா?
பிக்பாஸ் 3-வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில், ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவர் முகென். இவர்கள் யாரும் எந்த ஒரு குற்றச்சாட்டையும் எளிதில் சுமதி விட இயலாது. தன்னுடைய விளையாட்டை மிகவும் நேர்த்தியாக விளையாடினார் என்று பலராலும் பாராட்ட பெற்றவர். ஆதலால் தமிழக மக்களின் பேராதரவுடன் "பிக் பாஸ் சீசன் 3" டைட்டில் பட்டத்தை வென்றார்.
இவருடைய தந்தையின் பெயர் பிரகாஷ் ராவ் இவருடைய வயது 52 பிக்பாஸ் வீட்டிலிருந்தபோது, தன்னுடைய தந்தை இருதய நோயால் அவதிப்பட்டு வருவதாக சிலரிடம் முகென் கூறியது குறிப்பிடத்தக்கது. அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி பிரகாஷ் ராவ் இயற்கை எய்தியதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் உண்மை என்றும் கூறப்படுகிறது. மிகவும் அபாயகரமான இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், மருத்துவர்களின் தீவிர முயற்சியை மீறி உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது.
ரசிகர்கள் பலர் முகெனுக்கு ஆறுதல் கூறும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவருடைய தந்தைக்கு அஞ்சலி தெரிவிக்கும் குறுஞ்செய்திகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவமானது பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.