துப்பாக்கி முனையில் நடிகையை உல்லாசத்துக்கு அழைத்த நபர்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

நடிகை ரித்து சிங் "போஜ்புரி" என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்காக படக்குழுவினருடன் உத்தர பிரதேசம் சென்றுள்ளார்.


படப்பிடிப்பை முடித்த பின் தன்னுடைய ஹோட்டல் ரூமிற்கு சென்றுள்ளார்.  அப்போது அவர் எதிர்பாராத விதமாக பெரும் பிரச்னை ஒன்றில் சிக்கியுள்ளார். பங்கஜ் யாதவ் என்ற இளைஞர் திடீரென நடிகை ரித்துவின் ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு துப்பாக்கியை கொண்டு அவரை மிரட்டியுள்ளார்.  இதனால் மிகுந்த அச்சத்திற்கு உள்ளன நடிகை ரித்து பெரும் சத்ததோடு கூச்சலிட்டு உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பங்கஜ் துப்பாக்கியால் மேலே சுட்டுள்ளார். ஒட்டு மொத்த படக் குழுவினரும், பட பிடிபிடிப்பை முடித்து விட்டு ஒரே ஹோட்டலில் தான் தங்கி இருந்துள்ளனர்.  திடீரென ஒலித்த துப்பாக்கி சத்ததை கேட்டு அனைவரும் நடிகையின் ரூமிற்கு ஓடி வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அசோக் என்ற இளைஞர் நடிகை ரித்துவை காப்பாற்ற வந்துள்ளார்.

இதனை அடுத்து பங்கஜ் யாதவ் தன்னுடைய துப்பாக்கி மூலம் அவரை தாக்கியுள்ளார்.  இதனால் பலத்த காயங்களுடன் அசோக் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டார். இந்த சம்பவத்தை பற்றி ஓட்டல் நிர்வாகி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த S.P. பாட்டில் தலைமையிலான குழு நீண்ட நேரமாக  பங்கஜ் யாதவ் உடன் போராடினர். அப்போது திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் நடிகை தன்னுடன் ஒரு முறை உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி பங்கஜ் அதிர வைத்தார்.

இதனால் கடுப்பான எஸ்பி அவனது துப்பாக்கியை தன்னிடம் தருமாறு கூறினார். ஆத்திரத்தில் கடுப்பான பங்கஜ் துப்பாக்கி மூலம் போலீஸ் அதிகாரி   S.P. பாட்டில் அவர்களை சுட்டு தள்ளினார். துப்பாக்கி குண்டு  S.P. பாட்டிலின் காதுகளை துளைத்தது.  பிறகு நீண்ட முயற்சிக்கு பின் போலீசார் பங்கஜ் -ஐ கைது செய்தனர். பின்னர் பேசிய போலீஸ் அதிகாரி S.P. பாட்டில், " பங்கஜ் தொடர்ந்து என்னையும் நடிகை ரித்துவையும் தாக்கினார். ரித்துவை திருமணம் செய்து கொள்வதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்" என்று கூறினார்.

போலீசார்  பங்கஜ் -ஐ தங்களுடைய விசாரணைக்காக அழைத்து சென்றனர்.