வெற்றிலை பரிகாரம்! அனைத்து ராசியினருக்கும் செய்வினையில் இருந்து விடுதலை!

ராசிகளை பொருத்து துன்பத்தினை போக்குவதற்கு அனைவரும் பரிகாரங்களையும் பூஜைகளையும் மேற்கொள்வர். வெற்றிலை பரிகாரத்தினை செய்வதன் மூலம் அனைத்து ராசிகாரர்களும் துன்பங்களை தவிர்க்கலாம்.


மேஷம்: வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துனபங்கள் அகலும். செய்வினைகளால் ஏற்பட்ட கோளாறுகளில் இருந்து விடுதலை பெறுவார்கள்.

ரிஷபம்: வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும். செவ்வாய்க்கிழமையில் ராகு காலத்தில் இதைச் செய்தால் இன்னும் சிறப்பு. இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி பாதிப்புகள் நீங்கிவிடும்.

மிதுனம்: வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும். கடகம்: வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும். சிம்மம்: வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.

கன்னி: வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும். இவர்கள் இந்த பரிகார பூஜையைத் தொடர்ந்து 11 வாரங்களுக்கு செய்ய வேண்டும். துலாம்: வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும். கிராம்பு வைத்து வழிபடும் போது, கிராம்பு ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

விருச்சிகம்: வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும். தனுசு: வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும். மகரம்: வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

கும்பம்: வெற்றிலையில் நெய் வைத்து சனிகிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும். இவர்கள் இந்த பரிகாரத்தைத் தொடர்ந்து மூன்று சனிக்கிழமைகள் செய்து வந்தால், இவர்களது கவலைகளும், துன்பங்களும் தீரும். மீனம்: வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.