முதல் நாள் சிறந்த போலீசுக்கான விருது! மறுநாள் கத்தை கத்தையாக லஞ்சப் பணத்துடன் கைது!

சிறந்த காவல்துறை அதிகாரி காண விருது பெற்ற காவலர், ஒரு நாளிற்குள் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டிருப்பது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தெலங்கானா மாநிலத்தில் மெஹ்பூபா நகர் என்னும் இடமுள்ளது. இப்பகுதியில் உள்ள ஐ காவல் நிலையத்தில் பல்லே  திருப்பதி ரெட்டி கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். சுதந்திர தினமன்று தெலுங்கானா மாநிலத்தின் காவல் துறை அமைச்சரான ஸ்ரீநிவாச கௌடாவிடமிருந்து சிறந்த காவல்துறை அதிகாரிக்காண விருதை பெற்றார். தன் வாழ்வில் மிக உயரிய விருதை பெற்ற அவருக்கு 24 மணி நேரத்திற்கு உள்ளேயே நிலை தலைகீழாக மாறியது.

தெலங்கானா மாநிலத்தில் ரமேஷ் என்பவர் மணல் விற்பனை செய்து வருகிறார். உரிய ஆவணங்களுடன் மனதை விற்பனை செய்துவரும் அவரிடம் திருப்பதி ரெட்டி அடிக்கடி லஞ்சம் கேட்டு தொல்லை செய்துள்ளார். லஞ்சம் கொடுத்து  ஈடாகாததால் ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரமேஷிடம் திருப்பதிக்கு கால் செய்து 17 ஆயிரம் பணத்தை லஞ்சமாக தருவதாக கூறுமாறு கூறினர். ரமேஷ் அவ்வாறே கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மறைந்திருந்து திருப்பதி ரெட்டியை கண்காணித்து வந்தனர்.

ரமேஷிடம் இருந்து 17 ஆயிரம் ரூபாயை திருப்பதி ரெட்டி பெற்று கொள்ளும்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இந்த சம்பவமானது தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் பள்ளி திருப்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.