ஐந்தே நிமிடத்தில் அழகு தரும் சிம்பிள் அழகுக் குறிப்புகள் இதோ

அழகாக ஆசை எல்லோருக்கும் இருக்கவே செய்யும். ஆனால், அதற்கு நேரம் ஒதுக்கத்தான் யாருக்கும் வாய்ப்பு இருப்பதில்லை.


அதனால் குறைந்த நேரத்தில் அழகு தரும் சில குறிப்புகளைப் பார்க்கலாம்.

பெண்கள் பச்சைத் தக்காளிப் பழங்களைத் தினமும் சாப்பிட்டு வந்தால் தோல் சிவப்பாக மாறும். தோல் சுருக்கம் மறைந்து பார்க்க அழகாக இருக்கும். கோழி முட்டையை உடைத்து வெள்ளைப் பாகத்தை மட்டும் ஒரு கோப்பையில் ஊற்ற வேண்டும். இதில் கொஞ்சம் எலுமிச்சம்பழச் சாறைக் கலந்து, கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்து சேர்க்கக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து சோப்புப் போட்டு முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.

கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை கலப்படம் செய்யப்படாத நல்ல ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும்.

உடலுக்குத் தேவையில்லாத ஊளைச் சதையை கரைக்கும் சக்தி பப்பாளிப்பழத்திற்கு மட்டும்தான் உண்டு. வாரம் இரு முறையேனும் பப்பாளி சாப்பிடுவது நல்லது.

முகத்தில் பரு இருந்தால் எருமைப்பாலை  இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவினால் பருக்கள் மறைந்துவிடும். கண்களுக்கு மை தீட்டிக் கொள்ளும் பழக்கமுள்ள பெண்கள், படுக்கப் போகும்போது சோப்புப்போட்டு முகத்தைக் கழுவிவிட்டு அதன் பின்னரே படுக்க வேண்டும். கண் மையுடன் தூங்கினால் கண்கள் சீக்கிரம் கெட்டுப் போகும்.

தோல் உரிந்தால் அதைப் போக்க சிறிது கிளிசரின், எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவுங்கள். பிறகு சோப்பு போட்டு முகத்தைக் கழுவுங்கள்.  தேங்காயை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், தோல் பளபளப்புக் குறையாமலும், கோளாறு ஏற்படாமலும் இருக்கும்.   தினசரி காலையிலும் இவு படுக்கப் போகும் போதும் முகத்தில் எலுமிச்சம்பழத்தை அறுத்துக் தேய்த்தால், முகத்தில் வழியும் எண்ணெய் பசை போய்விடும்.

தினமும் படுக்கப் போகும்போது புருவங்களிலும் இமைகளிலும் கொஞ்சம் விளக்கெண்ணையைக் தடவிக் கொண்டால், புருவங்களிலும் இமைகளிலும் முடி நன்றாக வளரும்.