பரு இல்லாமல் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமாக இருக்கிறது. ஆனால், எல்லோருக்கும் அப்படி முகம் அமைவதில்லையே.
பெண்களை பயமுறுத்தும் பரு பிரச்னைக்கு எளிதான தீர்வு இதோ…
பரு உள்ளவர்கள் சாக்லெட், ஐஸ்கிரீம், எண்ணெய், கொழுப்புப் பதார்த்தங்கள் ஆகியவற்றை அறவே தவிர்ப்பது நல்லது. கை, நகங்களால் முகத்தை தொட்டுக் கொண்டிருக்கக் கூடாது. புதினா, வேப்பிலை ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவலாம்.
முகத்திற்குக் கண்ட கண்ட கிரீம் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. கிரீம் மேலும் பருக்களை அதிகரிக்கும். பருக்கள் மறைந்தபின் கிரீம் உபயோகிக்கலாம். முகத்தில் உள்ள அழுக்குகளைச் சுத்தம் செய்த பின் முகத்திற்கு ஆஸ்ட்ரிஜெண்ட் பஞ்சின் மூலம் தடவினால் பருக்கள் செப்டிக் ஆகாமல் தடுக்கப்படும்.