பதுங்கி பாய்ந்த இந்திய அணி! பதிலடி கொடுப்பாரா ரோகித் சர்மா?

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 6விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்கம் முதலே பங்களாதேஷ் அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து ஆடினர். தொடக்க ஆட்டக்காரர்கள் அவுட் ஆன பிறகு, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சரியாக விளையாடாதால் ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணியினர் ரன் குவிக்க தடுமாறினர்.

எனினும் பங்களாதேஷ் அணியின் கேப்டன் முஹம்மதுல்லா விளையாத விளையாடி 30 ரன்களை எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். இதனால் பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்தது. 

இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி சேஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது