தமிழகத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த 15 நிறைமாத கர்ப்பிணிகள்! அரசு மருத்துவமனைகளில் பதற்றம்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜனவரி முதல் மூன்று மாதங்களில் கெட்டுப் போன ரத்தம் ஏற்றப்பட்ட 15 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு எய்ட்ஸ் தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் உட்பட தமிழக அரசு ரத்த வங்கிகளின் லட்சணம் கொடி கட்டிப் பறக்கும் நிலையில் மற்றுமொரு அதிர்ச்சித் தகவல் ரத்தம் பெறத் தேவையிருக்கும் நோயாளிகளின் உயிர் உறுதித் தன்மை குறித்த கவலையை அதிகரித்துள்ளது

கடந்த 3 மாதங்களில் தமிழக அரசின் 3 மருத்துவமன்னைகளில் 15 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. ஆய்வில் அவர்கள் அனைவருக்கும் தமிழக ரத்த வங்கிகளில் இருந்து ரத்தம் செலுத்தப்பட்டது. தெரிய வந்தது. இதையடுத்து குறிப்பிட்ட ரத்த வங்கிகளில் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை பராமரிப்பதில் உள்ள மெத்தனமும், கேடுகெட்ட ஊழியர்களின் அலட்சியக் குறைபாடுகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு ரத்த வங்கிகளில் மூத்த மருத்துவர் குழுவினர்  ஆய்வு மேற்கொண்டபோது ரத்தம் அதற்கு உரிய வெப்ப நிலையில் பராமரிக்கப்படாததே ரத்தம் கெட்டுப் போகக் காரணம் என்று தெரியவந்துள்ளது. 

மனச்சாட்சியை அறுத்துத் தின்று விட்டு மிருகங்களாக நடமாடும் ரத்த வங்கி ஊழியர்கள் அந்த ரத்தத்தை அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகித்ததும், அரசு மருத்துவமனைகளில் உலவும் மெத்தனப் பிராணிகள் அந்த ரத்தத்தை பரிசோதிக்காமல் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றிய சாபக்கேடும் அம்பலத்துக்கு வந்துள்ளது. 

இதையடுத்து குறிப்பிட்ட ரத்த வங்கி அதிகாரிகள், செவிலியர்கள், தொழில் நுட்பப் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துரை செய்லாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.