ஒரு நாளைக்கு 10ஜிபி டேட்டா..! ஆனால் விலை ரொம்ப கம்மி! எந்த நெட்வொர்க் தெரியுமா?

மற்ற தனியார் நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிவிப்புகளை மேற்கொண்டுள்ளது.


பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது புதிதாக 4ஜி டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டெக்னாலஜியின் மூலம் வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் கவரப்படுகின்றனர்.

71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மேற்கூறப்பட்ட பிளானின் வாலிடிட்டியை 71 நாட்கள் அதிகரித்து, தற்போது 436 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த ஆஃபரை கேட்ட பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெரிதளவில் மகிழ்ந்துள்ளனர்.

தற்போது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 96 மற்றும் 236 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.

அதன்படி 96 ரூபாய்க்கு, நாளொன்றுக்கு 10 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் இந்தத் திட்டத்தின் மூலம் எந்த ஒரு எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு வசதிகளை நம்மால் பெற இயலாது.  மேலும் இந்த திட்டமானது ரீசார்ஜ் செய்ததிலிருந்து 28 நாட்களுக்கு உபயோகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

236 ரூபாய்க்கான திட்டத்தில், நாளொன்றுக்கு 10 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் எந்த ஒரு எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு வசதிகளை நம்மால் பெற இயலாது.  மேலும் இந்த திட்டமானது ரீசார்ஜ் செய்ததிலிருந்து 84 நாட்களுக்கு உபயோகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்விரு திட்டங்களையும் கேட்டு  வாடிக்கையாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.