டெய்லி இனி 3ஜிபி டேட்டா..! 71 நாட்கள் அதிக வேலிடிட்டி..! பிரபல நெட்வொர்க்கின் அதிரடி ஆஃபர்..! எந்த நிறுவனம் தெரியுமா?

குடியரசு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய ஆஃபர்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது.


பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது புதிதாக 4ஜி டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியுள்ளது. எங்க டெக்னாலஜியின் மூலம் வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் கவரப்படுகின்றனர்.

நேற்று இந்தியாவில் 71-வது குடியரசு தினம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு புதிய ஆஃபரை வெளியிட்டுள்ளது.

1,999 ரூபாய் பிளானில் 365 நாட்களுக்கு இலவச அன்லிமிட்டட் கால்கள், தினமும் 3 ஜிபி இலவச டேட்டா, பிரத்தியேக ரிங்டோன் மற்றும் 100 குறுஞ்செய்திகள் முதலியவை வழங்கப்பட்டு வந்தன. இந்த பிளான் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த ஆஃபர் இன்னும் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவு வளவில் அதிகரித்ததாக அந்த நிறுவனத்தை சேர்ந்த பலர் தெரிவித்துள்ளனர்.

71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மேற்கூறப்பட்ட பிளானின் வாலிடிட்டியை 71 நாட்கள் அதிகரித்து, தற்போது 436 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த ஆஃபரை கேட்ட பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெரிதளவில் மகிழ்ந்துள்ளனர்.