கார்த்தியின் தேவ் படம் பார்த்தால் BMW சூப்பர் பைக் பரிசாம்!

தேவ் படம் பார்த்தால் பி.எம்.டபிள்யு பைக் கிடைக்கும் என்று படக்குழுவினர் ரசிகர்களுக்கு ஆசை காட்டி வருகின்றனர்.


நடிகர் கார்த்தியின் தேவ் படம் கடந்த வாரம் வெளியானது. படம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் குறைந்தது. இதனால் கூட்டத்தை அதிகரிக்க ஒரு பரிசுத்திட்டத்தை தேவ் படக்குழு அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, உங்கள் குடும்பத்தில் தேவ் போன்று வாழ்க்கையை நேசித்து வாழ்பவர்‌ யாராவது உள்ளனரா?. ஆம் என்றால் அவர்களை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேவ் திரைப்பட குழுவினர் சார்பில் அவர்களுக்காக  2 (இரண்டு) BMW சூப்பர் பைக்குகள் பரிசாக காத்திருக்கின்றன.

போட்டி பற்றிய விவரங்கள்: a) நீங்களோ அல்லது b) உங்கள் குடும்பத்தினரோ அல்லது உங்கள் நண்பர்களோ ஏன் இந்த BMW SUPER BIKE ஐ வெல்ல வேண்டும் என்பதற்கான காரணத்தை எங்களுக்கு விளக்கி எழுதுங்கள்.

அதோடு  பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: கேள்வி 1: தேவ் திரைப்படத்தில், வாழ்க்கையை பற்றிய தேவின் சித்தாந்தமும், படத்தில் அவருடைய தொழிலும் என்ன? கேள்வி 2: தேவ் திரைப்படத்தில்,  மேக்னா பணத்தின்‌ மீது அதிக பற்று உடையவரா? கேள்வி  3: தேவ் திரைப்படத்தில் தேவ்-மேக்னா பிரிவிற்கான காரணம் என்ன?

ஒவ்வொரு கேள்விகளுக்குமான பதிலை 100 வார்த்தைகளுக்கு மிகாமலும் அல்லது உங்கள் பதிலை எங்களுக்கு  வீடியோ மூலமாகவும் அனுப்பலாம். போட்டிக்கான கடைசி தேதி: 25.02.2019 

பதில் அனுப்புபவர்களிடம் இருந்து சரியான பதில்களை தேவ் திரைப்பட குழுவினர் தேர்ந்தெடுத்து 2  வெற்றியாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்வர். வெற்றியாளர்களுக்கு நடிகர் திரு. கார்த்தி அவர்கள் அந்த 2 BMW சூப்பர் பைக்குகளை வழங்குவார்.

பரிசு வழங்கப்படும் தேதியை 28. 02. 2019 அன்று தேவ் திரைப்பட குழுவினர் அறிவிப்பார்கள். பதில்களை பின்வரும் மின்னஞ்சல் ஐடி-க்கோ அல்லது பின்வரும் மொபைல் எண்ணிற்கு Whatsapp மூலமாகவோ அனுப்ப வேண்டும். devbikecontest@gmail.com (மின்னஞ்சல்) 90000 90000 (WHATSAPP)

* குறிப்பு: 1. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதிக்குப் பின்னர் பெறப்படும் பதிவுகள் பரிசீலிக்கப்படாது. 2. தேவ் திரைப்பட குழு முடிவே இறுதியானது. 3.  மேலே குறிப்பிடப்பட்ட போட்டி மற்றும் பரிசு விநியோகம் இந்திய சட்டங்களின் படி இருக்கும்.