ரூபாய் நோட்டில் இந்து கடவுளான லட்சுமியின் படம் இடம்பெற்றால் பண மதிப்பு உயரும்.. சுப்பிரமணிய சாமி அதிரடி..!

பாஜக கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி இந்திய ரூபாய் நோட்டில் இந்து கடவுளான லக்ஷ்மியை அச்சிட்டால் இந்திய ரூபாய் மதிப்பு உயரும் என்று அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.


கடந்த சில நாட்களாகவே அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய போர் நடைபெற்று வருகிறது. இதனுடைய எதிர்விளைவாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது . அதுமட்டுமில்லாமல் ஈரானிலிருந்து பெறப்படுகின்ற கச்சா எண்ணெயின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் கடைநிலை பயனர்கள் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை உருவாகி இருக்கிறது . இது நம்முடைய பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி ஒரு சூப்பரான யோசனையை அளித்திருக்கிறார். அதாவது இந்தோனேஷியாவில் அவர்களுடைய பணத்தாளில் அவர்கள் வினைகளைத் தீர்க்கும் விநாயகரை அச்சிட்டுள்ளனர் . அதுபோல் நாமும் நம்முடைய ரூபாய் நோட்டில் வளங்களை அள்ளித் தரும் லக்ஷ்மி தேவியை அச்சிட்டால் நம் இந்திய நாட்டிற்கு உள்ள பொருளாதார பின்னடைவு நீங்கி ரூபாய் நோட்டின் மதிப்பு உயரும் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் இதனை பற்றி பாரத பிரதமர் மோடி நல்ல முடிவை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.