ஹெச்.ராஜாவுக்கு விழா எடுத்த உசிலம்பட்டி பாஜக நகரத் தலைவர்..! வழிப்பறி வழக்கில் கைதான விபரீதம்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

கத்தியை காண்பித்து பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்திருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் அன்னபார்ப்பட்டி எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு சரவணன் குமார் என்பவர் வெள்ளிக்கிழமை இரவன்று ஆட்டோவில் பயணித்துள்ளார். அப்போது திடீரென்று மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்துள்ளார். அவர் கையில் வைத்திருந்த 19 ஆயிரம் ரூபாய் பணத்தையும், செல்போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

உடனடியாக சரவணன் குமார் அன்னபார்பட்டி காவல் நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறி புகாரளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

வழிப்பறியில் ஈடுபட்டது உசிலம்பட்டி பகுதியின் பாஜக நகரமன்ற தலைவரான நல்லமலை என்று காவல்துறையினர் கண்டறிந்தனர். உடனடியாக காவல் துறையில் நல்லமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்ற மாதம் பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜா அவர்கள் கலந்துக்கொண்ட கூட்டமானது நல்லமலை தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது உசிலம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.