திடீர் தலைசுற்றல்! மயங்கி விழுந்த அழகிரி! வீட்டுக்கு விரைந்த மருத்துவர்கள்! மதுரை பரபரப்பு!

கலைஞரின் மகனும் முன்னாள் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரிக்கு கடந்த 2 நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மு.க.அழகிரி தன் குடும்பத்தினருடன் மதுரை சத்யசாய் நகரில்  உள்ள தனது இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் திமுக-வை விட்டு நீக்கியமையால் அரசியலில் ஈடுபடாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மதுரையில் உள்ள தன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் மு.க.அழகிரி .

அழகிரிக்கு திடீரென்று நேற்றையதினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆகையால் அழகிரியின் இல்லத்திற்கே மருத்துவர்கள் விரைந்து சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர் . அழகிரிக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்தமையால் அவருக்கு லேசான தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டிருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையும் மருந்துகளும் அளித்துள்ளனர்.

கடந்த வாரம் தான் அழகிரியின் மனைவி, மருமகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஆகையால் தன்னுடைய மகன் வழி பேரனான இதயநிதி பராமரிப்பில் ஓய்வு பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அழகிரிக்கு உடல்நிலை சரி இல்லாததை அறிந்த அவரது தொண்டர்கள் அழகிரி அவர்களின் இல்லத்தை நோக்கி சென்று அவரது உடல்நிலை பற்றி விசாரித்து வருகின்றனர்.