தந்தை உயிரிழந்தது தெரியாமல் இறுதிச் சடங்கில் ஒன்றரை வயது குழந்தை செய்த செயல்! கண்களை குணமாக்கும் சம்பவம்!

ஆஸ்திரேலியாவில் காட்டு தீயை அணைக்க போராடிய தீயணைப்பு படை வீரரின் இறுதி சடங்கில் அவரின் மகள் செய்த செயல் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ஆஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களாகவே காட்டுத்தீ பெருமளவில் பரவி வருகிறது.காட்டுத்தீயை அணைக்கும் போராட்டத்தில் தீயணைப்பு துறையினர் இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். இந்நிலையில் காட்டிற்குள் உள்ள உயிரினங்கள் மற்றும் மரங்கள் பெருமளவு சேதம் அடைந்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா மேற்கு சிட்னியை சேர்ந்த தன்னார்வலர் ஆண்ட்ரூ , மற்றும் ஜியோப்ரி கியாடோன் இணைப்பு துறையில் பணியாற்றி வருகின்றனர். புதர் தீயை அணைக்க சென்ற போது அவரது வாகனம் மீது எதிர்பாராத விதமாக பெரிய மரம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஆண்ட்ரூவின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் நடைபெற்றது இந்நிலையில் அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா நாட்டு பிரதமர் பிரதமர் ஸ்காட் மோரிசன் அவரது மனைவி ஜெனி ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஒன்றரை வயது மகள் தனது தந்தை அணிந்திருந்த ஹெல்மெட்டை தனது தலையில் அணிந்து கொண்டு என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் அங்குமிங்கும் சுற்றி விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த அனைவரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.