பிரபல டைரக்டருடன் போனில் கசமுசா! அடுத்தடுத்து வெளியாகும் மீரா மிதுன் ஆடியோ செம வைரல்!

சென்னை: முன்னணி இயக்குனர் ஒருவருடன் பிக் பாஸ் புகழ் மீரா மிதுன் நெருக்கமாகப் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகியுள்ளது.


பிக் பாஸ் 3வது சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவரான மீரா மிதுன் என்பவர் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கிய நாள் முதலாகவே, மீரா மிதுன்,சில சர்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கமாக உள்ளது.

சில நாள் முன்பாக, பிக் பாஸ் வீட்டிற்குள் இயக்குனர் சேரன் தன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டார் என்று, பொய்ப் புகார் கூறி, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில், தற்போது, முன்னணி இயக்குனர் ஒருவருடன் மீரா மிதுன் நெருக்கமாகப் பேசுவது போன்ற ஆடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

மீராவின் உதவியாளர்களில் ஒருவர், இந்த ஆடியோவை அவரது ஃபோனில் இருந்து எடுத்து, சமூக ஊடகங்களில் பரப்பி விட்டதாக, தெரிகிறது. ஆனால், பிரபலத்திற்கு ஆசைப்பட்டு மீரா மிதுன் இதுபோன்ற சேட்டைகளில் ஈடுபடுவதாக, நெட்டிசன்கள் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். இதனிடையே மீரா மிதுன் பல நடிகர்களுடன் செக்ஸ் சேட்டிங் செய்துள்ளதாக அவரத உதவியாளர் கூறியுள்ளார்.

அந்த செக்ஸ் சேட்டிங் ஆடியோக்கள் எல்லாம் மீரா போனில் இருப்பதாகவும் ஒவ்வொன்றாக இனி அதனை மீரா வெளியிடுவார் என்றும் உதவியாளர் கூறி அதிர வைத்துள்ளார். தொடர்ந்து இப்படி சர்ச்சைக்கு உள்ளாகி வரும் மீரா ஏதோ ஒரு பெரிய விவகாரத்தில் சிக்க உள்ளார்.