அத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது! கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே! இனி 2059ம் வருடம் தான் பார்க்க முடியும்!

அத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்ற நிலையில் கடைசி தீபாராதனை நடைபெற்று அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.


கடந்த ஜூலை 1ந் தேதி முதல் அத்திவரதர் மக்களுக்கு தரிசனம் கொடுத்து வந்தார். சுமார் 1 கோடியே பத்து லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

நேற்றுடன் தரிசனம் முடிந்த நிலையில் கடைசியாக அத்திவரதருக்கு தீபாராதணை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி மிகுதியில் கோவிந்தா கோவிந்தா என்று முழங்கினர்.

இதன் பிறகு தீபாராதணையில் உள்ள சூடம் அணைக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது. அப்போது எடுத்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.