அப்பா தான் அம்மாவ அப்படி செஞ்சாங்க! பார்க்க கூடாததை பார்த்த மகளால் ராணுவ வீரருக்கு ஏற்பட்ட பரிதாபம்! திருவண்ணாமலை திகுதிகு!

குஜராத் மாநிலத்தில் ராணுவ வீரர் தன் மனைவியை கொலை செய்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம் கிருஷ்ணாபுரம் சேர்ந்தவர் நாகேந்திரன் மற்றும் ரேணுகா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி யோகி ஸ்ரீ மற்றும் தன்யாஸ்ரீ என்ற இரு குழந்தைகள் உள்ளனர். நாகேந்திரன் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார் . பணி நிமித்தமாக குஜராத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் தன் மனைவி குழந்தைகளுடன் குடும்பமாக வசித்து வருகிறார் . சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் திடீரென்று பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த 28 ஆம் தேதி நாகேந்திரனின் மனைவி ரேணுகா சிலிண்டர் வெடித்து விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கிய ரேணுகாவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 

விபத்தில் சிக்கிய ரேணுகாவை பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நாகேந்திரன் தன்னுடைய மாமனாரிடம், அவரது மனைவி ரேணுகா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தான் சிலிண்டரை வெடிக்க வைத்துள்ளார் என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து ரேணுகாவின் பெற்றோர் குஜராத்திற்கு அலறியடித்து சென்றுள்ளனர். அதன் பின்பு மருத்துவமனையில் இறந்த நிலையில் கிடந்த தங்களது மகளை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து ரேணுகாவின் உடலை தங்களுடைய சொந்த ஊருக்கு கொண்டு வந்து விட்டனர். 

இதனையடுத்து இறந்துபோன ரேணுகாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது வழக்கம் முறைப்படி நல்லடக்கம் செய்தனர். இதற்கிடையில் ரேணுகாவின் மகனான யோகி ஸ்ரீ , தன்னுடைய அம்மா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரை தீயிட்டுக் கொளுத்தியது தன்னுடைய தந்தை நாகேந்திரன் தான் என்றும் மிகவும் அதிர்ச்சிக்குரிய தகவலை தன் தாத்தாவிடம் கூறியிருக்கிறான். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரேணுகாவின் தந்தை உடனடியாக போலீசில் நாகேந்திரனை பற்றி புகார் அளித்திருக்கிறார். தற்போது போலீசார் ராணுவ வீரரான நாகேந்திரனை கைது செய்து அவரது மனைவி ரேணுகாவை கொலை செய்ததற்கான காரணங்களை பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.