ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !!

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 70 Aircraft Maintenance Engineer(AME) பணியிடங்களுக்கு பிளஸ் டூ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


 பணி: Aircraft Maintenance Engineer(AME) காலியிடங்கள்: 70 (திருவனந்தபுரம்-64, நாக்பூர்-06) வயதுவமர்பு: 01.01.2019 தேதியின்படி 55க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.95,000 - 1,28,000 தகுதி: கணித பாடப்பிரிவில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று Aircraft Maintenance பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணியிடம்: திருவனந்தபுரம், நாக்பூர் தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: திருவனந்தபுரம் Air India Engineering Services Limited, Maintenance Repair Organization – Hangar, Chakkai Thiruvananthapuram-695007 என்ற விலாசத்தில் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Air India Engineering Services Limited, New Delhi என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. மற்ற அனைத்து பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Chief Maintenance Manager, Air India Engineering Services Ltd. MRO Hangar, Chakkai, Trivandrum, Kerala-695007. மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/697_1_Advertisement-for-AMEs_-TRV-NAG.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.02.2019