இனிமேல் செல்பி இல்லை ஸ்லோபி தான்! வந்துவிட்டது ஐபோன் 11 புரோ!

பல விதமான புதுமைகளை புகுத்தி செப்டம்பர் 20 இல் வெளியாகிறது ஐபோன் இன் புதிய மாடல்.


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் என்றாலே ஐபோன் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான் . ஏனெனில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் ஐபோன் நிறுவனம் தன்னுடைய புதுவித மாடல்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவது தன்னுடைய வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடலை சந்தைக்கு அறிமுகப்படுத்த காத்துக் கொண்டிருக்கிறது ஐபோன் நிறுவனம் .

நேற்றைய தினம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐபோன் நிறுவனம் தங்களுடைய புதுமாடல்களான ஐபோன்-11, ஐபோன்-11‌ ப்ரோ, ஐபோன்-11 ப்ரோ மேக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள 3 மாடல்களை அறிமுகப்படுத்தப்பட்டன. 

இந்த புதுரக ஐபோன் மாடலை ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அறிமுகப்படுத்தி அதனுடைய அம்சங்களையும் விளக்கிக் கூறியுள்ளார். அதன் சிறப்பு அம்சங்களை இப்போது காண்போம். 

ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் மாடலாக ஐபோன் 11  ப்ரோ ( iPhone11Pro) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே எந்த ஒரு செல் போனிலும் இல்லாத அம்சமான முன்பக்க கேமராவை பயன்படுத்தி ஸ்லோமோஷனில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க இயலும். இதனுடைய பெயர் "ஸ்லோபி" என்று அமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வசதி இந்த போனில் உள்ளது .

ஐபோன் மாடல் இல் நாம் குறை என கருதப்படுவது அதனுடைய பேட்டரி பேக்கப் மட்டும்தான் ஆனால் அதனையும் இந்த ஐபோன் 11 மாடலில் சரி செய்துள்ளனர் ஐபோன் நிறுவனத்தினர் . ஐபோன் 11 ப்ரோ மாடலில் ஐபோன் XS மேக்ஸ் மாடலை விட கூடுதலாக 5 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போனில் மூன்று பிரைமரி சென்சார்கள் உள்ளன. ஐபோன் 11 மாடலில் 12 MP முன்பக்க கேமராவும் , 3 பின் பக்க கேமராவும் கொண்டுள்ளன. பின்பக்க கேமராக்களில் ஒவ்வொன்றும் 12 MP கேமராக்கள் உடையதாகும் . அதாவது 12MP WideCamera, 12MP TelePhoto Camera, 12MP Ultra Wide Camera பொருத்தப்பட்டுள்ளது . 

அமெரிக்க சந்தையில் ஐபோன் 11 ப்ரோ மாடல் விலை 999 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் விலை 1099 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஐபோன் 1‌1 மாடல், 64,900 ரூபாய் எனவும் , ஐபோன்-11 ப்ரோ மாடல் 99,900 ரூபாய் எனவும் , ஐபோன் ‌-11 ப்ரோ மேக்ஸ் மாடல் 1,09,900 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .