மாணவர்களிடம் இனி ஜாதியை கேட்க கூடாது! பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு!

நடப்பு ஆண்டு முதல் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டாம் என அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தற்போது 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு EMIS இணையதளத்தில் இருந்தும், அந்தந்த மாவட்ட அளவிலும்  மாற்றுச்சான்றிதழ்கள் ( TC ) வழங்கப்பட ஏற்ப்பாடுசெய்யபட்டுள்ளது. மாணவரின் டி.சி.யில், Refer Community Certificate issued by Revenue Dept என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும் மாணவர்களின் ஜாதிப் பெயரை குறிப்பிடக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியாக சாதிச்சான்றிதழ் வழங்குவதால், டி.சி.யில் மாணவரின் சாதியைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை மாறாக அந்த இடத்தை காலியாக விட்டு விடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும்  பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

எக்காரணம் கொண்டும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் ஜாதிய பெயரையோ குறியீடையோ தெரிவிக்க கூடாது என்றும் அப்படி தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த 5 ஆண்டுகளாக அமலில் உள்ள போதும் சில தலைமை ஆசிரியர்கள் தவறுதலாக ஜாதிப் பெயரை டிசியில் குறிப்பிட்டுவிடுகின்றனர்.

இதன் காரணமாகவே திட்டவட்டமாக ஜாதி பெயரை குறிப்பிடக்கூடாது என்று கூறி சுற்றறிக்கை தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.