அண்ணாச்சி ராஜகோபாலை தூக்குல போடுங்க! காலம் கடந்த நீதி! ஜீவஜோதியும் அதற்குத்தான் ஆசைப்படுகிறார்!

அண்ணாச்சி


காதல் என்பது தெய்வீகமானது என்பார்கள். ஆனால், முறை தவறிய காதல் உயிரை எடுக்கவும் செய்யும் என்பதற்கு சமீபத்திய உதாரணம்தான் சரவணபவன் அண்ணாச்சிக்குக் கிடைத்திருக்கும் தண்டனை.

ஆனால் அண்ணாச்சிக்குக் கிடைத்திருக்கும் தண்டனை மிகவும் கொஞ்சம் என்று கொந்தளிக்கிறார் ஜீவஜோதியின் உறவினர் ஒருவர். பணம் இருக்கிறது என்பதால் 2001ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு விசாரணையை கிட்டத்தட்ட 18 வருடங்கள் இழுத்தடித்த அண்ணாச்சி ராஜகோபாலுக்கு இப்போது ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.

இப்போது அண்ணாச்சி உடல் நலமின்றி இருக்கிறார். அதனால் சிறைக்குப் போனாலும் உடல் சரியில்லை என்பதைக் காரணம் காட்டி மருத்துவமனைக்குத்தான் போய்விடுவார். அங்கே அவருக்கு இருக்கும் பணத்தால் எல்லோரையும் விலைக்கு வாங்கிவிடுவார்.

இதுவே சாதாரண ஒரு மனிதன் செய்த தவறு என்றால் இந்நேரம் தண்டனையில் பாதி நிறைவேறியிருக்கும். ஆனால், இப்போதுதான் தீர்ப்பே  உறுதி செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இந்தத் தண்டனை போதவே போதாது. ஜீவஜோதியின் வாழ்க்கையில் விளையாடி, அந்தப் பெண்ணின் துன்பத்துக்குக் காரணமாக இருந்த அண்ணாச்சிக்கு தூண்டுத் தண்டனை கொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான நீதி. ஜீவஜோதியும் உண்மையில் அவர் தூக்கில் தொங்குவதைத்தான் விரும்புவார்.

காலம் தாழ்த்தி நீதி வழங்குவது மறுக்கப்பட்ட நீதி எனபார்கள். அண்ணாச்சிக்கு இத்தனை காலம் தாழ்த்தி வழங்கப்பட்டிருக்கும் தண்டனை உண்மையிலே மற்றவர்களுக்குப் பாடமாக இருக்க வேண்டும் என்றால் தூக்கில்தான் போட வேண்டும்”” என்று ஜீவஜோதியின் உறவினர் கோரிக்கை வைக்கிறார்.

குருவிக்கூட்டை கலைத்தது போன்று ஜீவஜோதி வாழ்க்கையை சிதைத்த ராஜகோபாலுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் தரலாம்.