குழந்தை பெற்ற பிறகு தான் அது..! கணவன் சொன்னதை கேட்டு கண்ணீர் வடித்த சன் டிவி அனிதா..!

திருமண வாழ்க்கையை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான அனிதா சம்பத் தோன்றிய சில நாட்களிலேயே மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றார். இவருக்கு என்று சமூக வலைதளங்களில் அனிதா ஆர்மி என்று பல பக்கங்கள் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மிகவும் பிரபலமான அனிதா, தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் மற்றும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த காப்பான் ஆகிய திரைப்படங்களிலும் ஒருசில காட்சியில் செய்திவாசிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக வலம் வந்து இருப்பார். 

செய்தி வாசிப்பாளர் அனிதா கடந்த 3 ஆண்டுகளாக பிரபாகரன் என்பவரை காதலித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிதா தன்னுடைய காதலர் பிரபாகரனை தன்னுடைய பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் செய்தி வாசிப்பாளர் அனிதா மற்றும் அவரது காதல் கணவர் பிரபாகரன் பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளனர்.

அப்போது பேசிய அனிதா தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றியும் தன்னுடைய கணவர் பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். தன்னுடைய கணவர் பிரபாகரன் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையிலும் தற்போது திருமணம் முடிந்த பின்பும் இதுவரை தன்னிடம் " I Love U" என்று கூறவில்லை என வருத்தப்பட்டார். அதற்கு பதில் அளித்த பிரபாகரன், நமக்கு குழந்தை பிறக்கும் அந்த நிமிடம் நான் உன்னிடம் " I Love U" என்று கண்டிப்பாக கூறுவேன் என்றார். 

பின்னர் பேசிய அனிதா சம்பத், தன்னுடைய திருமணத்தை பற்றிய தகவல்களை கூறினார். அனைவரும் நான் மிகவும் பிரபலமான ஒருவரையோ அல்லது என்னுடைய துறைசார்ந்த நபரையோ தான் திருமணம் செய்து கொள்வேன் என்று எதிர்பார்த்த நிலையில் பிரபாகரனை திருமணம் செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சி கரமான தகவலாக இருந்தது.

பணமும் புகழும் அதிகமாக இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்வதால் பணம் மட்டும்தான் கிடைக்குமே தவிர அன்பும் பாசமும் கிடைக்காது. ஆனால் எங்களிடம் பத்து பைசா கூட இல்லாமல் இருந்தாலும் நாங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்வோம் என்று மனதை நெகிழ வைக்கும் விதமாக அனிதா சம்பத் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.