எப்போ குழந்தை பெற்றுக் கொள்வீர்கள்..! விவாகரத்தான டிடியிடம் கேட்க கூடாத கேள்வி..! ஆனால் அதற்கு அவர் அளித்த பதில்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துவரும் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி ரசிகர்களின் பல்வேறுவிதமான கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார்.


தனது சிறுவயது முதலே மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் டிடி கடந்த 15 ஆண்டுகளாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அது மட்டுமல்லாமல் பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை அளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் டேட்டிங் சென்றதுண்டா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த டிடி அவருக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே என்று கூறியுள்ளார். மேலும் ரித்திக் ரோஷனிடம் நடிகை ஹன்சிகா தான்ன் நட்பில் இருக்கிறார். அவர் சிபாரிசு செய்தால் இது நடக்க வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறியிருந்தார்.

மற்றொரு ரசிகர் உங்களுக்கு விவாகரத்து ஆகி விட்டதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் கூறிய டிடி ஆமாம் எனக்கு விவாகரத்து ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன என்று கூறியிருந்தார். மேலும் ஒரு ரசிகர் எப்போது அம்மா ஆகப் போகிறார்கள் என்று கேள்வி கேட்க அதற்கு டிடி குழந்தை பெற்றால் தான் அம்மாவா ? அன்னை தெரேசா போன்றவர்கள் இல்லையா எனவும் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.