வேல்முருகன் திரட்டிய பெரும் கூட்டம்! அன்புமணியை கை கழுவும் வன்னியர் இளைஞர்கள்!

தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோஷத்துடன் வேல்முருகன் நடத்திய பேரணிக்குத் திரண்ட கூட்டத்தைக் கண்டு அன்புமணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.


அன்புமணிக்குப் போட்டியாக வேல்முருகன் வளர்ந்துவருவதைக் கண்டு பா.ம.க.வில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியே அனுப்பப்பட்டவர் வேல்முருகன். அவர் ஏதேனும் ஒரு கட்சியில் சேர்ந்து காணாமல் போய்விடுவார் என்பதுதான் ராமதாஸ் எண்ணமாக இருந்தது. ஆனால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று தொடங்கி பெரும் போராளியாக வலம் வருகிறார்.

தமிழர்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களை எதிர்த்துப் போராடும் கட்சியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி திகழ்கிறது. கடந்த தேர்தலில் சீமானைவிட அதிக வாக்குகள் வாங்கி சாதனை படைத்தார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா மண்ணின் மைந்தர்களுக்குப் போராடுவது போன்று, தமிழர்களுக்கு போராடி வருகிறார் வேல்முருகன். வன்னியர்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அனைத்து தமிழர்களுக்காகவும் போராடுவதால் அவர் பின்னே செல்லும் கூட்டம் அதிகரித்து வருகிறது.

மாநில அரசு பணியிலும் தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களிலும் 90 சதவீத வேலை தமிழர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்து 28.2.2019 அன்று போராட்டம் நடத்தினார் வேல்முருகன். இந்த போராட்டத்தில் வந்துகுவிந்த இளைஞர்களின் எண்ணிக்கையைக் கண்டு அன்புமணி அதிர்ச்சி அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது பா.ம.க.வில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்துவருகிறது. காடுவெட்டி குரு விவகாரத்துக்குப் பிறகு கட்சியில் இளைஞர்கள் சேர்க்கை கிட்டத்தட்ட குறைந்தேவிட்டது. வேல்முருகன் மீதியிருக்கும் இளைஞர்களையும் இழுத்துவிடுவார் என்றே தெரிகிறது. ஆக, காடுவெட்டு குரு மகன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் பா.க.வுக்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துவருகிறார்கள்.

இப்போது என்ன செய்யப்போகிறார் ராமதாஸ்?