உயிருக்கு போராடியவரை மீட்க விரைந்த ஆம்புலன்ஸ்! எதிரே வந்த டிராக்டரால் டிரைவருக்கு நேர்ந்த பரிதாபம்! தவிக்கும் 2 மனைவிகள்!

டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததுள்ளது பரமத்திவேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு தினேஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு கொத்தளம் என்னும் பகுதிக்கருகே சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்பதற்காக ஆம்புலன்சில் வருமாறு தினேஷுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதிவேகமாக கோப்பனம்பாளையம் என்னும் பகுதிக்கருகே தினேஷ் டிராக்டரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனத்தை முந்திச்செல்ல தினேஷ் முயற்சித்துள்ளார். அப்போது எதிரே வந்த டிராக்டர், அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் மீது சரமாரியாக மோதியது. மோதிய அதிர்ச்சியில் சம்பவயிடத்திலேயே தலை நசுங்கி தினேஷ் உயிரிழந்துவிட்டார். ஆம்புலன்ஸ் அப்பளம் போல் நொறுங்கியது.

ஆம்புலன்ஸின் சைரனை தினேஷ் இயக்காமல் சென்றதாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷுக்கு 2 மனைவிகள் உள்ளனர். 6 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது கோப்பனம்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.