உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்பட்டி ராயுடு இடம் பெறவில்லை. இவருக்கு பதிலாக 4வது வீரராக களமிறக்க விஜய் ஷங்கரை அணியில் சேர்த்துள்ளனர்.
உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு மறுப்பு! விரக்தியில் ராயுடு எடுத்த திடீர் முடிவு!
இது குறித்து அணி தேர்வு குழு உறுப்பினர் MSK பிரசாத் கூறியதாவது.
விஜய் ஷங்கர் பேட்டிங் , பவுலிங் , பீல்டிங் என மூன்று பரிணாமங்களிலும் (3 dimension) சிறந்து விளங்குகிறார். எனவே அம்படி ராயுடுவிற்கு பதிலாக விஜய் ஷங்கரை உலககோப்பை அணியில் தேர்வு செய்துள்ளோம்.
3 மாதங்களுக்கு முன்னர் இந்திய அணியில் 4வது வீரராக களமிறங்க அம்படி ராயுடு தான் சரியாக இருப்பார் என விராட் கோஹ்லி கூட சொல்லி இருந்தார். அனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அவர் சரியாக விளையாடாத காரணத்தினால் அவரை உலககோப்பை அணியில் எடுப்பது சந்தேகமாக நிலவி வந்தது. நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அம்படி ராயுடு இடம் பெறாததால் கடுப்பான ராயுடு ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்காக 3D கிளாசை ஆர்டர் செய்து இருப்பதாக ட்வீட் செய்துள்ளார். விஜய் ஷங்கர் 3 dimension களிலும் சிறப்பாக செயல்படுகிறார் என்ற MSK பிரசாத் கூறி இருப்பதை கலாய்க்கும் வகையில் இவர் இப்படி ட்வீட் செய்திருக்கிறார்.
காபீ வித் கரண் நிகழ்ச்சியில் சர்ச்சையில் சிக்கியதால் ஹர்டிக் பாண்டிய அணியில் இடம் பெறவில்லை. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட விஜய் ஷங்கர் இக்கட்டான நிலையில் சிறப்பான செயல்பாட்டை வெளிக்காட்டினார். இதனால் அவர் உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.