மீண்டும் A படத்தில் அமலா பால்! ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம தீனி!

தமிழ் திரையுலகின் முன்னனி நடிகைகளில் ஒருவரான அமலா பால், கடைசியாக ராம் குமார் இயக்கத்தில் வெளிவந்த ராட்சஸன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஷுனு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார்.


முதலில் இந்த திரைப்படமானது மக்களிடம் சரியாக சென்று அடையவில்லை. பின்னர் தான்  மக்கள் இந்த  திரைப்படத்திற்கு பச்சை கொடி காட்டினர்.  இதன் மூலம் யாருமே எதிர்பாராத அளவிற்கு ராட்சஸன் திரைப்படம் பெரும் வெற்றியை சந்தித்தது பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் குவிந்தது.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடந்து அமலா பால் நடிக்கும் திரைப்படம்  தான் ஆடை. இந்த திரைப்படத்தின் பஸ்ட் லுக், கடந்த  ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கு காரணம் நடிகை அமலா பால் அணிந்திருக்கும் ஆடை தான்.

கவர்ச்சி மிக்க கிழிந்த ஆடையில், கண்ணீர் மல்க கையில் தடியோடு காட்சி அளிக்கும் விதமாக அமைந்திருக்கும் அந்த பஸ்ட் லுக் போஸ்டர். அனைத்து தரப்பு மக்களையும் தன் வசப்படுத்தியது அந்த பஸ்ட் லுக் போஸ்டர். இந்த திரைப்படத்தை ரத்ன குமார் இயக்குகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடை திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கட்டாயம் கிடைத்துவிடும் என்று படக் குழுவினர் சார்பில் நம்பபப்பட்டது.  ஆனால் தணிக்கை குழு இந்த திரைப்படத்தில் வன்முறை மற்றும் கவர்ச்சி மிகுந்து காணப்படுவதால் இந்த படத்திற்கு A சான்றிதழ் வழங்கியுள்ளது.  இது படக் குழுவினர்களுக்கு சற்று ஏமாற்றத்தை  அளித்து உள்ளது என்றே கூற வேண்டும்.    

இந்த படத்தை V ஸ்டுடியோஸ் சார்பில் விஜி சுப்பிரமணியன் தயாரிக்கிறார். அமலா பால் மிகுந்த தைரியமிக்க பெண்ணாக நடித்திருக்கிறார். முன்னதாக சிந்துசமவெளி எனும் ஏ படத்தில் நடித்து தான் தமிழ் திரையுலகில் அமலா பால் அறிமுகம் ஆனார்.