சூரியன் புதனோடு இணைந்து உக்கிரம்! முதலமைச்சராக்கிய தேவேந்திர பட்னாவிஸ் ஜாதகம்!

மஹாராஷ்டிராவில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தேவேந்திர பட்னாவிஸின் கிரக நிலைகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.


நேற்றிரவு வரை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை திடீர் திருப்பமாக தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார். 

இதனிடையே மராட்டிய மாநிலத்தில் முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்போது 5 ஆண்டுகளை வெற்றிகரமாக முடிப்பார் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

அவருடைய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தபோது அவருக்கு கடக லக்னம், துலாம் ராசியில் குரு, மேஷ ராசியில் சனி, செவ்வாய் ராசியில் நீசம் ஆகியன அமைந்துள்ளன. கேமதுரும  யோகத்தை அடைந்திருந்தாலும், சந்திரனை ஒன்பதாம் அதிபதி குருவை பார்வையிடுவதால் இவருடைய ஜாதகம் ராஜயோகத்தை பெற்றுள்ளது.

2014-ஆம் ஆண்டில் செவ்வாய் திசை புதனில் பார்வையிடும் போது, அவருக்கு ராஜ யோகம் அடித்தது. அப்போதுதான் அவர் மராட்டியத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். இன்று காலை பதவியேற்றபோது ராகு காலத்திற்கு முன்பே பதவியேற்றுள்ளார். இதனால் இவருடைய ஆட்சிக்கு பல சிக்கல்கள் இருந்தாலும் முதலமைச்சராக பதவியில் நீடிப்பார் என்று மராட்டியத்தில் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.