குழந்தை பெற்றெடுத்த பிறகு ஆல்யா மனாசாவின் உடம்பு என்ன இப்படி ஆகிவிட்டது..! அந்த புகைப்படங்கள் உள்ளே!

பிரபல சீரியல் நடிகை ஆலியா மானசா குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு உடல் எடை குறைத்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியலில் கணவன் மனைவியாக நடித்தவர் ஆலியா மானசா- சஞ்சீவ் தம்பதியினர். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இருவரும் காதல் வசப்பட்டனர். இவர்களது திருமணத்திற்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினர் தற்போது நிஜ வாழ்க்கையிலும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் இந்த தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகர்களும் தங்களுடைய படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அந்த வகையில் நடிகர் சஞ்சீவ் அவரது மனைவி ஆலியா மானசா ஆகியோர் தங்களது வீட்டிலேயே முடங்கி உள்ளனர். நடிகை ஆலியா மானசா பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு காணப்பட்டார். இந்நிலையில் தற்போது நடிகை ஆலியா மானசா உடல் எடையை குறைத்து தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை ஆலியா மானசாவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.